Google Search

விக்ரம் - ஒரு படம் இரு பேச்சு

ராவணன் படம் வெளியாவதையொட்டி பத்தி‌ரிகையாளர்களை சந்தித்த விக்ரம் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். முக்கியமாக ஐஸ்வர்யாராய் குறித்த விஷயங்கள்.

நானும், அபிஷேக் பச்சனும் இந்தப் படத்தில் கஷ்டப்பட்டு நடித்தோம். ஆனால் எங்களைவிட இரண்டு மடங்கு கஷ்டப்பட்டவர் ஐஸ்வர்யாராய்தான் என்று புகழ்ந்தார் சீயான். இவ‌ரின் இன்னொரு பெருமிதம், நான் உங்கள் நடிப்புக்கு ரசிகன் என்று ஐஸ்வர்யாராய் விக்ரமிடம் கூறியது.

சில காவி கட்சிகள் கூறுவது போல் ராவணன் ராமாயணக் கதையோ, மகாபாரத கதையோ கிடையாது என்று விக்ரம் தெ‌ளிவுப்படுத்தினார். வீரா, தேவ், ராகினி என்ற மூன்று கதாபாத்திரங்களுக்குள் நடக்கும் கதைதான் ராவணன் என்று மேலும் தெ‌ரிவித்தார். இந்தி பதிப்பில் அபிஷேக் வீராவாகவும், விக்ரம் தேவ் ஆகவும் நடித்துள்ளனர். தமிழில் விக்ரம் வீரா, பிருத்விரா‌ஜ் தேவ். இரு பதிப்புகளிலும் ராகினியாக ஐஸ்வர்யா நடித்துள்ளார்.

ஷங்கர், மணிரத்னம், பாலா, தரணி போன்ற இயக்குனர்களின் படங்களில் மீண்டும் நடிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை தெ‌ரிவித்தவர், புதிய இயக்குனர்கள் நல்ல படங்களை தருகிறார்கள். அவர்கள் படங்களிலும் நடிக்க வேண்டும் என்றார்.

இங்கு இப்படி பேசிய விக்ரம் வட இந்திய ஊடகத்துக்கு பேட்டியளிக்கையில், இந்தியில் வரும் 3 இடியட்ஸ் போன்ற ஸ்கி‌ரிப்ட்கள் தமிழில் வருவதில்லை, இந்தி சினிமாதான் இப்போதைக்கு பெஸ்ட் என்பதாக மாற்றி பேசியுள்ளார்.

சீயான் நீங்க சொன்ன இரண்டில் எது ச‌ரி?

source: tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1006/12/1100612030_1.htm
Your Ad Here

Bidvertiser